பாஜகவின் கள்ளக்குழந்தை சீமான்.. உறுதி செய்த உரிமை : யாரு சொல்லிருக்காருனு பாருங்க!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2025, 1:54 pm
வருகின்ற 16ம் தேதி திருச்சி உழவர்களின் சந்தையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாடு தொடர்பாக மாநாட்டு திடலில் மாநில துணை பொதுசெயலாளர் மயிலை அப்துல் ரஹீம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த மாநாட்டில் தற்போது சமூகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட உள்ளோம்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபர் வீட்டில் ₹2 கோடி ரொக்கம், நகைகள் கொள்ளை : சிக்கிய கருப்பு ஆடு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மீண்டும் அயோத்தி போன்ற பிரச்சனையை முன்னெடுக்கிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இணக்கமாக இருந்து வழிபாடு நடத்திய இடத்தில் திடீரென பாஜக உள்ளே நுழைந்து பலியிடக்கூடாது என்று கூறுவது, அடுத்த அயோத்தி பிரச்சனையை உருவாக்க நினைக்கிறது.
அதேபோல் இந்த பிரச்சனையை திமுக சரியாக கையாள வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சீமான் கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட போது அவர் பெற்ற வாக்குகள் 12ஆயிரம் வாக்குகள் மட்டும் தான், இந்த முறை அதிமுக, பாஜக போட்டியிடவில்லை.
ஆனால் பெரியாரை எதிர்க்கும் பாஜகவின் ஓட்டுகள், பெரியாரை எதிர்க்கும் சீமானுக்கு விழுந்துள்ளது. எனவே சீமான் பாஜகவின் கள்ளக்குழந்தையாக இருக்கிறார். அவரால் ஒருபோதும் பெரியாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.
நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா கூட்டணியில் அவர்கள் இணைந்து காங்கிரஸ்சுடன் கூட்டணி அமைத்திருந்தால், 13 தொகுதிகளில் அவர்களால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும்.
ஆனால் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல்கள், கட்சி தலைமையில் இருக்கும் முரண்பாடுகளால், அவர்கள் இந்த கூட்டணியை வைக்க தவறிவிட்டனர். தேர்தல் முடிந்த அதை சிந்திக்கின்றனர்.
இதே நிலைப்பாடு தான் மம்தா பானர்ஜியும் கூட்டணியில் இருந்து வெளியே போவதாக கூறியுள்ளார். ஆனால் பாஜக என்ற பாசிச ஆட்சியை நாம் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றால், அது கூட்டணியாக இருந்து செயல்பட்டால் மட்டுமே முடியும். எனவே இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்கும் போது தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை தாங்கள் வெற்றிப்பெற்றால் 7 சதவீதமாக உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள். ஆனால் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்கள்.
இந்நிலையில், இன்றுவரை அந்த இடஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.