சீமானுக்கு நாகரீகமே தெரியாதா? அவரோட கல்வி தகுதி என்ன? வருண்குமார் ஐபிஎஸ் வக்கீல் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 7:52 pm

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 4 நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டதும் சீமான் வருண்குமாரை அவதூறாக பேசியது தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் மனு தாக்கல் செய்தார் வருண்குமார்.

இதையும் படியுங்க: வாழும் கண்ணகியா? சுந்தர் சி தான் உண்மையான கண்ணகி… பொங்கியெழுந்த பிரபலம்!

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் ஆஜரானார். DiG வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவரது வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசி உள்ளார்.

Varun kumar Ips Appeared in Court

சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ips என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது?

Varunkumar IPS Seeman Clash

இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். டிஐஜி வருண்குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்த போது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

  • Honey Rose Complaint Chemmanur Owner Bobby Arrest பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply