100 நாள் வேலைக்காக காத்திருக்கும் சீமானின் தாயார்? வெளியான வீடியோ!

Author: Hariharasudhan
25 December 2024, 11:27 am

100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, நாதக கொடி வைத்த காரில் சீமானின் தாயார் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற்து.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது, இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தக் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இவ்வாறு வந்த கிராம மக்களோடு, இதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் வந்திருந்தார்.

இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலைவாய்ப்பை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். அந்த வகையில்,, சீமானின் தாயார் அன்னம்மாள் நாதக கொடி கட்டி வந்த பொலேரோ வாகனத்தில் ஏறிச் சென்றார்.

Seeman mother wants to 100 days work with NTK car

முன்னதாக, இந்தக் கிராம மக்கள் இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்குச் சென்று, அரணையூர் கண்மாய்க்கு வரும் வைகை ஆற்று நீர் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த குழாய்கள் கோர்ட் உத்தரவுப்படி பாதி அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!

மெலும், அரணையூர் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கண்மாய் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சீமான் விமர்சித்து வரும் நிலையில், அவரது தாய் அதே வேலையைக் கேட்டு வந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 71

    0

    0

    Leave a Reply