மைக் புலிகேசியா நானு? வருண்குமார் ஐபிஎஸ் பாணியில் சீமான் பதில்!

Author: Hariharasudhan
19 February 2025, 4:27 pm

வருண்குமார் ஐபிஎஸ், சீமான் குறித்த கேள்விக்கு மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை: ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக வருண்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், இன்று சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால், சீமான் அந்த நோட்டீசை பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே, இன்று இவ்வழக்கின் விசாரணைக்காக மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் வருண்குமார் ஐபிஎஸ் ஆஜரானார். அப்போது, சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை. இது குறித்து வழக்கறிஞர் கூறுவார்” எனக் கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில், வருண்குமார் ஐபிஎஸ் மைக் புலிகேசி எனக் குறிப்பிட்டது குறித்து, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Seeman Vs Varunkumar IPS

அதற்கு சீமான், “வருண்குமார் ஐபிஎஸ் என்னைச் சீண்டியதால் தான் அவர் அங்கு உள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி போலீஸ் வேலையைத்தான் பார்க்க வேண்டும். கட்சிக்காரர் போல் பேசி வருகிறார். தேவையில்லாமல் சீண்டினால் வெறிதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக தோல்வி.. அமைச்சர் பதவி விலகுக.. அண்ணாமலை காட்டம்!

மேலும், வருண்குமாரின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், “இன்று நீதிமன்றத்தில் காவல்துறை மண்டல துணைத் தலைவராக இருக்கக்கூடிய டிஜஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். சீமானுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, வருகிற ஏப்ரல் 7 அன்று சீமான் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும், பிடிவாரண்ட் கூட கொடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
  • Leave a Reply