தருமபுரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டுபாடி வாக்கு சேகரித்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து இன்று தருமபுரி நான்கு ரோட்டில் நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேச துவங்குவதற்கு முன் வானத்தில் இரு கழுகுகள் வட்டமிட்டன.
மேலும் படிக்க: ஆட்சிக்கு வராமலேயே நல்ல திட்டங்களை பெற்றுக் கொடுத்தது பாமக : சௌமியா அன்புமணி பிரச்சாரம்…!!
அதனை தொடர்ந்து, அவர் பேச முற்பட்ட போது, தனியார் ஆம்புலன்ஸ் குறுக்கிட ஆம்புலன்ஸ் போன பின் பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது :- முயற்சி எடுக்க வேண்டும். முடிவு பண்ணி பார்க்க வேண்டும், எனக் கூறி பாட்டு பாடி வாக்குசேகரித்தார்.
“என் மக்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ராசாக்கா.. மைக் சின்னத்துல ஓட்டு போடணும் மையாக்கா.. மாற்றம் வரணும் பாரு நாட்டு மக்கள் நல்லாயிருக்க, நோக்கம் இருப்பது யாரு ?மாற்றம் வரணும் பாரு? நாட்டு மக்கள் நல்லா இருக்க நோக்கம் இருப்பது யாரு? அந்த எண்ணம் உள்ள சின்னத்தில ராசக்கா நம்ம எல்லாரும் ஓட்டு போடணும் மையாக்கா… ஏற்றம் வரணும் பாரு… ஏழை சனம் வாழ்க்கையில முன்னேற்றம் வரணும் பாரு… அந்த நோக்கமுள்ள சின்னத்தில.. அந்த எண்ணம் உள்ள சின்னத்துல ராசாக்கா… நம்ம எல்லாருமே ஓட்டு போடணும் மையாக்கா..” என பாட்டு பாடினார்.
மேலும் படிக்க: நயினாரை சிக்க வைத்ததே அண்ணாமலைதான்… மன்சூர் அலிகான் பகீர் குற்றச்சாட்டு…!!
தொடர்ந்து, எங்களின் வெற்றி உங்களின் வெற்றி. நாம் பிறந்த தமிழனத்தின் வெற்றி. இதுவரை ஏழ்மை, தாழ்மை, வறுமை, இவற்றை துரத்தி அடிக்க மைக் சின்னத்தை அழுத்தி வாக்கை செலுத்துங்க, என பேசி அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.