கர்நாடகா முதல்வர் பெயர் ‘பொம்மை’… இங்க ‘ஆளே ஒரு பொம்மை’ : CM ஸ்டாலினை கிண்டலடித்த சீமான்..!

Author: Babu Lakshmanan
22 August 2022, 5:47 pm

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, ஒரு பொம்மை முதலமைச்சர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திங்கள்சந்தை பகுதில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்

அப்போது, பேசிய அவர், “கர்நாடக முதலமைச்சர் பெயர் பொம்மை இங்கு பெயர் பொம்மை இல்லை ஆளே பொம்மை” என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.

கண்டன உரையின் போது குட்டி கதை சொல்லி அவர், கடற்கரையில் படுத்துக் கிடந்த ஒருவன், அங்கு கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட பெட்டிகளில் இருக்கும் பொருளை ஒவ்வொன்றாக கடலுக்குள் வீசியதாகவும், கடைசி பொருளை வீசும் முன்பு, அது என்ன என்று பார்க்கும் போது, அது வைரம் என தெரிய வந்ததாகவும் கூறினார்.

இரவு முழுவதும் வைரத்தை கடலுக்குள் முட்டாள் பையன் வீசியதாகவும், அதுபோலத்தான் வைரங்கள் எல்லாம் இங்கு இருப்பதாகவும், மண்ணாங்கட்டிகள் மேலே இருப்பதாகவும் கூறி நகைத்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 530

    0

    0