”உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ..” சீமான் சர்ச்சை பேச்சு.. வெடித்த அரசியல் பூகம்பம்!

Author: Hariharasudhan
8 January 2025, 7:55 pm

“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?” என சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் இன்று (ஜன.08) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?

மதுவுக்கு எதிராக ஆயிரம் தென்னை மரங்களை வெட்டினார். அவரை பகுத்தறிவுவாதி என்று தானே சொல்கிறீர்கள்? என் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று சொல்வதுதான் அறிவு உள்ளவரின் செயல். மரத்தை வெட்டிச் சாய்த்தது பகுத்தறிவா உலகில் எந்த நாட்டில் மது இல்லை.

Seeman about Periyar Speech

மது குடிக்க வேண்டாம் என்பது கட்டிய மனைவி உடன் படுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்கும், பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? சமூக நீதிக்கும், ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? சமூகநீதியைப் போராடி பெற்றுக் கொடுத்தது பெரியாரா? ஆனை முத்துவா?” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மதுபானக் கடைகளில் ஸ்டாலின் படம் வேண்டும்.. மதுரை பாஜக நூதன முறையில் மனு!

சீமானின் பெரியார் குறித்த இந்த கருத்து தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளத். இந்த நிலையில், “நாளை காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்ல இருக்கிறேன். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!