விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2025, 3:51 pm
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என கூறினார்.
வெற்றி தோல்வியை தாண்டி நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. எங்கள் கால்களை நம்பிதான் பயணம் உள்ளது, அடுத்தவர் கால்கள் தோள்களை நம்பி இல்லை என கூறினார்.
இதையும் படியுங்க: 2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது வாடிக்கயான விஷயம். ஆனால் நாம் தமிழர் எப்போதும் தனித்து தான் போட்டியிடும், 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 முறை நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5வது முறையாக தனித்து போட்டியிட போகிறோம். எந்த கட்சியும் செய்யாததை செய்கிறது நாம் தமிழர் மட்டும்தான்.

தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர், அவர் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை என சீமான் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.