கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

Author: Rajesh
1 February 2022, 3:07 pm

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை காந்திபுரம் மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் காந்திபுரம் டாடாபாத் பகுதியில் உள்ள குடோனில் ஆய்வு செய்த போது மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதே போல் தண்ணீர் பந்தல் சாலையில் குடோனிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, சலாம், கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும், கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை பெற்று வடமாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • sivakarthikeyan produced new film titled house mates ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…