கேட்பாரற்று கிடந்த மர்மமூட்டை…விரைவு ரயிலில் குட்கா கடத்திய மர்மகும்பல்: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை..!!
Author: Rajesh25 April 2022, 3:16 pm
கோவை: கோவை இரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் நேற்று இரவு 9.30 மணியளவில், சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வேஸ்ட் கோஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரயில்வே உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கே கழிவறை அருகே ஒரு மூட்டை கேட்பாரற்று கிடப்பதை கண்ட ரயில்வே போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 5 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை கொண்டு வந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளாத நிலையில் புகையிலைப் பொருள்களை மட்டும் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.