உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்…! பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…

Author: kavin kumar
3 February 2022, 1:24 pm

தூத்துக்குடி : கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன், காவலர்கள் செல்வகுமார், செல்வி ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ஹைவேலியைச் சேர்ந்த திருமூர்த்தி (41) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் ரயில்வே இரண்டாவது இருப்புப்பாதை பணியில் ஒப்பந்ததாரராக இருப்பதாக தெரிவித்தார். பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லட்சத்தை பறிமுதல் செய்து, கோவில்பட்டி நகராட்சி மேலாளர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி வெங்கடேஷிடம் அறிவுறுத்தினர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!