தேர்தல் விதிகள் அமல்…பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை: கோவையில் ரூ.17 லட்சம் பணம் பறிமுதல்..!!

Author: Rajesh
29 January 2022, 3:01 pm

கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திண்டுக்கல் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதகத்துல்லா அமீது. இவர் தனது காரில் கோவையில் நிலம் வாங்குவதற்காக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்துள்ளார். மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலையில் வந்தபோது பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.

சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லுமாறு சதகத்துல்லாவிடம் அறிவுறுத்தியுள்ளனர்

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!