“அதிமேதாவிகள்.. தற்குறிகள்”.. விஜயை வெளுத்து வாங்கிய சேகர்பாபு!

Author: Hariharasudhan
7 December 2024, 12:29 pm

தமிழ்நாட்டின் அரசியல் தெரியாமல் சிலர் அறியாமையில் கருத்து கூறி வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விஜயை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சென்னை: சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.07) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்திற்கே வராதவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதியையும் திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, திமுகவுக்கு எப்போதெல்லாம் இது போன்ற அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக, 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள்.

TVK Vijay about DMK

மீண்டும் 2026இல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரியணையில் ஏற்றும் வரை எங்களுடைய பயணம், எங்களுடைய வேகம் குறையாது. யாராவது குறையும் என்று நினைத்தால், அது பகல் கனவாகவே இருந்துவிடும்” எனத் தெரிவித்தார். இதனை மறைமுகமாக தவெக தலைவர் விஜயைக் கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Sekarbabu about TVK VIjay

ஏனென்றால், நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்போடு 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.

இதையும் படிங்க: விஜயின் கடைசி ‘நச்’.. கைதட்டிய ஆதவ் அர்ஜூனா.. கைவிடப் போகிறாரா திருமா?

நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட வர முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன், அவருடைய மனம் முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என பேசினார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 89

    0

    0