குளத்தை தூர்வாருவதாக கூறி 10 லட்சம் மெட்ரிக் டன் மணல் எடுத்த விற்பனை : திமுக ஒப்பந்ததாரர் மீது பாஜகவினர் பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 5:04 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் சுப்பையர் குளம் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது.

இந்த குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை எடுத்து மாநகராட்சி அந்த குளத்தை தூர்வார 47 லட்ச ரூபாய் அனுமதித்தது.

இந்நிலையில் இதனை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஜெகன் குளத்தை தூர் வருவதற்கு பதிலாக சுமார் 8 அடி ஆழம் தோண்டி 1 மாதத்தில் சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் மண்ணை எடுத்து அதனை 84 லட்ச ரூபாய்க்கு விற்று உள்ளதாகவும், மாநகராட்சி ஒப்பந்தத்தை மீறி குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்த ஒப்பந்ததாரர் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் தலைமையில் சுனில், ரமேஷ், தினகரன்,ரோசிட்டா திருமால், ஆச்சியம்மாள் உள்ளிட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் இன்று ஆணையர் ஆனந்த் மோகனிடம் புகார் மனு அளித்தனர்.

ஒப்பந்ததாரர் ஜெகன் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கா விடில் இரண்டு நாட்களில் பாஜக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!
  • Close menu