ஆட்சியர் பலிகடாவா? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு!

Author: Hariharasudhan
6 February 2025, 5:58 pm

அதிமுக மீது வேண்டும் என்றே பழியைப் போட்டு திமுக உள்நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை: மதுரை மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகளான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தரப்பில் தயார் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கை, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இன்று நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர், “மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றதால்தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக அரசு எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை.

எப்போதும் நிகழ்வுக்குப் பின்னரே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரையில், மதுரையில் மதம் தொடர்பான பிரச்னை வந்ததே கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை, திமுக பலிகடாவாக மாற்றிவிட்டது. நாங்கள் 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறோம். அதிமுக மீது வேண்டும் என்றே பழியைப் போட்டு திமுக உள்நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Sellur Raju on Thirupparankundram issue

இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவைக் கேட்டு நடப்போம். வக்ஃபு போர்டு தலைவராக இருக்கும் நவாஸ் கனி நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டிய தேவையில்லை. பாஜக ஆர்ப்பாட்டம் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர். அறிக்கையை திரும்பப் பெறவில்லை என்றால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.67,000-க்கு டிக்கெட் வாங்கியும் 5 பேர் மட்டுமே பார்த்த விடாமுயற்சி.. எங்கு தெரியுமா?

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் நகரைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என அதிமுக பிரதிநிதியைத் தவிர்த்து அனைவரும் ஒப்புக் கொண்டனர்” என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…