ஸ்டாலினுக்கு எடப்பாடியே பரவால்ல.. செல்லூர் ராஜூ தடாலடி!

Author: Hariharasudhan
17 October 2024, 5:55 pm

முதல்வரின் ஊது குழலாக சேகர் பாபு செயல்படுகிறார் எனவும், அடிமையிலும் அடிமையாக திமுக அரசு உள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை: அதிமுகவின் 53வது தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மதுரை கே.கே.நகரில் உள்ள அதிமுக முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், “2026ல் ஸ்டாலின் வீட்டுக்கு போவார், எடப்பாடி கோட்டைக்குப் போவார். எடப்பாடி பழனிசாமி பெரிய மக்கள் செல்வாக்குடன் ஆட்சியமைப்பார்” என்றார்.

இதையும் படிங்க: எனக்கு புடிபடல.. கள்ளச்சாராயத்துக்கு பதில் டாஸ்மாக்.. ராமதாஸ் விளாசல்!

தொடர்ந்து, சென்னை மழை பாதிப்பை எடப்பாடி பழனிசாமி பார்வையிடவில்லை என்ற அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து குறித்த கேள்விக்கு, “மழை பாதிப்புகளில் பணியாற்ற கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினின் ஊது குழலாக சேகர் பாபு செயல்படுகிறார்.

3 மணி நேர மழையையே சென்னை தாங்கவில்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்றார்கள். ஆனால் சாலைகள் எல்லாம் வெள்ளக்காடானது. யாருடைய புண்ணியமோ தெரியவில்லை, அந்த புயல் கடந்து சென்று விட்டது.

EPS MK Stalin

தகுதியற்றவர்கள் தான் பிறரை தகுதியற்றவர் என விமர்சிப்பார்கள். உண்மையில் யார் தகுதியற்றவர் என்பது மக்களுக்குத் தெரியும். ஸ்டாலின் ஆட்சிக்கு எடப்பாடி ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை.

நேற்று வரை ஆளுநரும், அரசும் எலியும் பூனையுமாக இருந்தார்கள். இன்று இருவரும் ஒன்றாகியுள்ள அதிசயம் நடந்துள்ளது. சட்டமன்றத்தில் கேலி செய்து வெளியே அனுப்பபப்பட்டவர். எந்த ஆளுநருக்கும் இது போன்ற ஒரு இழிநிலை வந்ததில்லை. கூட்டணி கட்சிகளை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எங்களை அடிமை அரசு என்று சொன்னார் ஸ்டாலின், இன்று அடிமையிலும் அடிமையாக இருக்கிறது திமுக அரசு” என காட்டமாக பதில் அளித்தார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!