கமல்ஹாசனுக்கு அரிச்சுவடி தெரியாது.. ஒரு சீட்டுக்காக திமுகவுக்கு லாலி பாடுகிறார் : செல்லூர் ராஜூ விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 7:20 pm

கமல்ஹாசனுககு அரிச்சுவடி தெரியாது.. ஒரு சீட்டுக்காக திமுகவுக்கு லாலி பாடுகிறார் : செல்லூர் ராஜூ விமர்சனம்!!

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ் வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக் காட் டிய நிலையில் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னெச்சரிக்கையாக அனைத்துமே மக்களுக்கு செய்துவிட்டோம் என அமைச்சர்கள் சொல்லி சொல்லி கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டனர். தி.மு.க. அமைச்சர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உட மைகளை, சொத்துக்களை மக்கள் இழந்துவிட்டனர்.

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக தி.மு.க.விற்கு லாலி பாடுகிறார். தி.மு.க.வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார். கமல்ஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள்.

துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை. பதுங்கு குழியில் இருந்து கமல்ஹாசன் தான் தற்போது வெளி வந்துள்ளார். அரசியல் நாகரிக மற்றவர் கமல்ஹாசன்.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?