அதிமுக மாநாடுக்கு வாங்க… திமுக நிர்வாகிக்கு அழைப்பிதழ் கொடுத்த செல்லூர் ராஜூ : ஷாக் கொடுக்கும் அறிவாலயம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 9:54 pm

ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது

இந்த நிலையில் இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்களை சந்தித்து மாநாடு அழைப்பிதழை வழங்கினார்

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீ செல்லூர் ராஜு அவர்களை சந்தித்தவுடன் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து அவரை வரவேற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தனம் குங்குமம் வெற்றிலை பாக்குடன் திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக மாநாடு அழைப்பிதழை கொடுத்து மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு போட்டியிட்டபோது அப்போதைய திமுக ஜெயந்திபுரம் பகுதி செயலாளர் ஏ கே முருகானந்தம் செல்லூர் ராஜு ஓட்டு கேட்டு வந்த போது சால்வை அணிவித்ததால் திமுகவின் மேலிடத்திலிருந்து ஏகே முருகானந்தம் பகுதி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜுவை திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகா ஸ்ரீ சால்வை அணிவித்து மாநாடு அழைப்பிதழை பெற்றுள்ளது திமுக கட்சிக்குள் பேசும் பொருளாக மாறி உள்ளது

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!