ஜெயிலருக்கு ரஜினி.. மதுரை மாநாட்டுக்கு எடப்பாடியார் தான் HERO.. மாஸாக பேசிய செல்லூர் ராஜு.. !!

Author: Babu Lakshmanan
10 August 2023, 3:42 pm

ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை காமராஜர் சாலை, அரசமரம் விநாயகர் கோவிலில் மாநாடு அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அழைப்பதனை கொடுத்து மாநாட்டிற்கு வரவேற்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது;- வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான அழைப்பிதழை மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று அதிமுகவினர் வழங்க உள்ளதாகவும், ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான், என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர் மாநாட்டிற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்க எடப்பாடி யார் உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் முறையில் மாநாடு அமைய உள்ளது. இதில் அதிமுக தொடக்கம் முதல் தற்போது வரை உள்ள சாதனைகளை கண்காட்சியாக மாநாடு இடம் பெற உள்ளது. திமுகவை அழிக்கின்ற மாநாடாக இந்த மாநாடு அமையும். திமுகவுக்கு ஒரு பின்னடைவை உருவாக்கி கொடுக்கும்‌, என்றார்.

பா.ஜ.க மதுரை மாவட்ட தலைவர் அறிக்கை குறித்த கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்து விட்டார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!