ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை காமராஜர் சாலை, அரசமரம் விநாயகர் கோவிலில் மாநாடு அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அழைப்பதனை கொடுத்து மாநாட்டிற்கு வரவேற்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது;- வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான அழைப்பிதழை மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று அதிமுகவினர் வழங்க உள்ளதாகவும், ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான், என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர் மாநாட்டிற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்க எடப்பாடி யார் உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் முறையில் மாநாடு அமைய உள்ளது. இதில் அதிமுக தொடக்கம் முதல் தற்போது வரை உள்ள சாதனைகளை கண்காட்சியாக மாநாடு இடம் பெற உள்ளது. திமுகவை அழிக்கின்ற மாநாடாக இந்த மாநாடு அமையும். திமுகவுக்கு ஒரு பின்னடைவை உருவாக்கி கொடுக்கும், என்றார்.
பா.ஜ.க மதுரை மாவட்ட தலைவர் அறிக்கை குறித்த கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்து விட்டார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.