மானம், ரோஷம் இருக்கா? அண்ணாமலை, இராம சீனிவாசனுக்கு இனிமேல் தான் இருக்கு : செல்லூர் ராஜூ எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 4:41 pm

மானம், ரோஷம் இருக்கா? அண்ணாமலை, இராம சீனிவாசனுக்கு இனிமேல் தான் இருக்கு : செல்லூர் ராஜூ எச்சரிக்கை!!

மதுரை நடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு தாராப்பட்டி, துவரிமான் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசியதாவது, நான் முதன்முதலில் எனது மேற்கு தொகுதி தாராபட்டி பகுதியில் தான் முதலில் பிரச்சாரத்தை தொடங்கி 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்

ராசியான ஊர் அது அங்கிருந்து தான் பிரச்சாரம் தற்போது டாக்டர் சரவணனுக்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். கண்டிப்பாக டாக்டர் சரவணன் வெற்றி பெறுவார்

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செருப்புக்கு சமம் என பேசிய அண்ணாமலை ஒரு கூமுட்டை. ஹிந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர் அண்னாமலைக்கு தெரிய வேணாமா

டி.டி.வி தினகரனுக்கு மானம் ,ரோசம் இருந்தால் அம்மாவை கொச்சைப்படுத்தி பேசி அவரது மனைவிக்கு நிகராக பேசியவர் தான் அண்ணாமலை அவர் பின்னாடி ஏன் தேர்தலில் போறீங்க உங்களுக்கு மானம் இல்லையா என டிடிவி.தினகரனை கண்டித்தார்.

OPSக்கு அவருடைய எண்ணம் போலவே பலா பழம் சின்னம் கிடைத்துள்ளது. அவர் அதிமுகவை அழிக்க நினைத்தார். தற்போது அவர் இருக்கிற இடம் தெரியாமல் போயுள்ளார்

டீக்கடையில் டீ ஆத்துபவரை முதல்வராக பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் அம்மா. இன்று அதிமுகவை அழிக்க பார்க்கிறார் இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிராக வேலை பார்பவர்கள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு காணாமல் போவர்கள்

இனிதால் அண்ணாமலைக்கு , ராம சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினருக்கு இனிமேல் தான் இருக்கு என செல்லூர் ராஜீ எச்சரித்தார்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!