கடும் விரக்தியில் செல்வராகவன்..! ‘என்னத்துக்கு படம் பண்ணனும்னு தோணுது’ :படம் பண்ணவே பிடிக்கல.. இந்த நடிகர் தான் காரணமா?

Author: Vignesh
1 October 2022, 9:23 am

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் திரைக்கு வந்திருக்கிறது. அந்த படம் தான் அவர் தனுஷ் உடன் 12 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்ந்திருக்கும் படம். இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து இருக்கிறது.

இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் செல்வரகவனுக்கு பெரிய மாலை வாங்கி போட்டு பாராட்டி இருக்கிறார்.

இருப்பினும் செல்வராகவன் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவே வேண்டாம் என்கிற படி பேசி இருக்கிறார்.

மற்ற மொழிகளில் மாற்று சினிமா வருகிறது, Parallel சினிமா எடுக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் என்னத்துக்கு படம் பண்ணனும்னு தோணுது, தமிழ்நாட்டிலேயே படம் பண்ண பிடிக்கல என செல்வராகவன் தெரிவித்து இருக்கிறார்.

நானே வருவேன் படத்திற்கு சுத்தமாக தனுஷ் ப்ரோமோஷன் செய்ய வரவில்லை. அந்த விரக்தியில் தான் செல்வராகவன் இப்படி பேசுகிறாரோ.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!