கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் அருகே தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக., இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், கட்சி நிர்வாகிகள், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து டிஎஸ்பி., அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர் அவர்கள், டிஎஸ்பி., வெங்கடேஷிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஸ் ஸ்டாப் அருகே, அதிமுக., இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை கோவில்பட்டியைச் சேர்ந்த பாஜ., நிர்வாகிகள் தினேஷ் ரோடி, பொன்ராஜ், ராம்குமார், ஆர்.பி.பொன்ராஜ் உள்ளிட்டோர் எரித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, அதிமுக., ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அதிமுக., நிர்வாகிகள் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை எரித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், கோவில்பட்டியில் இன்று (மார்ச் 8) தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக., செயலாளரும், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றனர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.