நீலகிரியில் நியாயமாக தேர்தல் நடக்க வேண்டும்.. அந்த வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி துணை? பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 10:04 pm

நீலகிரியில் நியாயமாக தேர்தல் நடக்க வேண்டும்.. அந்த வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி துணை? பரபரப்பு புகார்!

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, நீலகிரி உதவி செலவின பார்வையாளர் சரவணன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவரின் செலவினக் கணக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார். செலவை குறைக்க தேர்தல் அதிகாரி என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார்.

உதவி செலவின பார்வையாளராக நியாயமான தேர்தலை உறுதி செய்யும் எனது உரிமைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகமாக நடந்தால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார்.

நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி