மூதாட்டி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.. வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த இளைஞர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 12:18 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு வைச் சேர்ந்தவர் நாகப்பன் (75) மனைவி கல்யாணி(69). கடந்த மூன்றாம் தேதி அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கம், வைர நகைகளைக் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டுக்கு குடிநீர் விநியோகிக்கும் பண்ணப்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கேசவன்(28) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்

அப்போது கேசவன் தனது நண்பர்களான ராமச்சந்திரன் என்கிற வீரா(35), வெங்கடேஷ்(36), ராமன் (28), பழனிசாமி ஆகியோருடன் சேர்ந்து நகைகளுக்காக, கல்யாணியை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கேசவனைப் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 18 பவுன், 1ஜோடி வைரத்தோடு, நகைகள் மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இக்கொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன், வெங்கடேஷ், ராமன் தேடி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!