வாரத் தொடக்கத்தில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச்சந்தைகள்!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 11:59 am
வாரத் தொடக்கத்தில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச்சந்தைகள்!!
வாரத்தின் முதல் நாளான இன்று 65,560 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 268.88 புள்ளிகள் சரிந்து 65,726.76 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 83.30 புள்ளிகள் சரிந்து 19,570.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Hcl Tech, Dr. Reddys Labs, TCS, ONGC, Eicher Motors போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Adani Ports, BPCL, SBI, Bajaj Finserc, Adani Enterpirse போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.40 புள்ளிகள் சரிந்து 79.65 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.80 புள்ளிகள் உயர்ந்து 37.91 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.60 புள்ளிகள் சரிந்து 18.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 14.30 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.