சரிந்தது சென்செக்ஸ்.. வாரத் தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பங்குச்ந்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 அக்டோபர் 2023, 1:36 மணி
Share market - Updatenews360
Quick Share

சரிந்தது சென்செக்ஸ்.. வாரத் தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பங்குச்ந்தை!!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக சென்ற வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது. இந்த சரிவினால் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.

இதனை ஈடு செய்யும் விதமாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. ஆனால் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, இன்று 63,885 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 238.77 புள்ளிகள் சரிந்து 63,544.03 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 43.30 புள்ளிகள் சரிந்து 19,003.95 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

BPCL, Reliance, CIpla, Ultra Tech Cement, Bharti Aritel போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Dr Reddys Labs, Tata Motors, Maruti Suzuji, Eicher Motors, Axis Bank போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.60 புள்ளிகள் சரிந்து 78.55 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 47.64 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.20 புள்ளிகள் உயர்ந்து 19.00 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.55 புள்ளிகள் உயர்ந்து 12.48 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 334

    0

    0