சற்று நிம்மதி கொடுத்த சென்செக்ஸ்… மந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள் : முதலீட்டாளர்கள் ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2023, 11:58 am
சற்று நிம்மதி கொடுத்த சென்செக்ஸ்… மந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள் : முதலீட்டாளர்கள் ஹேப்பி!!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிவுடன் இருந்த நிலையில், நேற்றும் இன்றும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 275.62 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் சில பங்குகளில் மதிப்பு சற்று குறைந்தும் தங்கத்தின் விலை இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தும் இருந்தது.
BPCL, Cipla, Power Grid Corp, Heri Motocorp, Titan Company போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. IndusInd Bank, Kotak Mahindra, Adani Enterpris, Adani ports, M&M போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.15 புள்ளிகள் சரிந்து 97.90 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 39.57 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 25.10 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் பங்குகள் -14.30 புள்ளிகளாக உள்ளது.