வார முதல் நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. பங்குச்சந்தைகள் உயர்வு… முதலீட்டாளர்கள் வரவேற்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2023, 12:05 pm
வாரத் தொடக்கமான இன்றைய வர்த்தக நாளில் 65,811 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 199.08 புள்ளிகள் உயர்ந்து 65,920 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 60.05 புள்ளிகள் உயர்ந்து 19,577 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,721 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,517 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
M&M, Divis Labs, Sun Pharma, Hindalco, SBI Life Insurance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Britannia, Nestle, Bajaj Finance, Bajaj Auto, Titan Company உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd., 1.63 புள்ளிகள் உயர்ந்து 62.95 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 14.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதே போல ARSS Infrastructure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.10 புள்ளிகள் சரிந்து 19.00 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.54 புள்ளிகள் உயர்ந்து 41.00 புள்ளிகளுடன் வர்த்தமாகிறது.