மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி.. அதானி வழக்கில் TANGEDCO பங்கு என்ன?

Author: Hariharasudhan
21 November 2024, 4:24 pm

அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர்: கரூரில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji), இன்று (நவ.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதானி குழும வழக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையைக் கருத்தில் கொண்டு மத்திய மின்சாரத் துறையுடன் 1,500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

முக்கியமாக, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

SENTHIL BALAJI KARUR BYTE

முன்னதாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் (Solar Energy) தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் அதானி குழுமம் முதலீடு திரட்டியது தொடர்பாக அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் குற்றச்சாட்டு வைத்து உள்ளது.

இதையும் படிங்க: பொறுங்க பாஸ்.. விஜயுடன் நான் மேடையேறவா? – திருமாவின் கணக்கு தான் என்ன?

அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது சகோதரர் மற்றும் அதானி குழும நிறுவனங்கள் உள்பட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கவுன்சில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதனால் நேற்று முதல் அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. மேலும், அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 157

    0

    0