தலைவர் கைதான துக்கத்துல சரக்கு அடிக்கிறே… MRP ரேட்டுக்கு கொடுங்க : மதுப்பிரியர் சேட்டை செய்த வீடியோ!!!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2023, 3:40 pm
தலைவர் கைதான பிறகும் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் தலைவர் செந்தில் பாலாஜி கைதானது நினைத்து துக்கத்தில் தான் சரக்கு அடிக்கின்றேன் என மதுப்பிரியர் ஒருவர் மதுக்கடை ஊழியரிடம் மது வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மதிப்புரியர் ஒருவர் மது வாங்கிவிட்டு தலைவர் கைதாகி விட்டார்.
ஆனால் இருந்தும் டாஸ்மார்க் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வாங்குகின்றனர் எனவும் தலைவர் கைதான துக்கத்தில் தான் நான் சரக்கு அடிக்கிறேன் எனவும் நகைச்சுவையாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது