புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி.. திருநெடுங்களநாதர் கோவிலில் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்..!!
Author: Babu Lakshmanan18 July 2023, 11:51 am
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்டர். இதைத் தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதையடுத்து, அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவர் உடல் நலம் பெற வேண்டி அவரது தந்தை தாய் மற்றும் மனைவி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இடர்களை களையும் திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கி சென்றனர்.