செந்தில் கணேஷ் – ராஜலட்சுமியா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

Author: Rajesh
24 May 2022, 5:12 pm

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினர்‌.

மேலும் அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது‌. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் ராஜலட்சுமி சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் கொடுத்த புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலை பாடியுள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.

மேலும் கிராமத்து ஜோடியாக வலம் வந்த செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் மாடர்னாகவும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த அழகிய ஜோடி அண்மையில் தங்களது திருமண நாளைக் கொண்டாடியுள்ளது. அதனைத் தொடர்ந்து செந்தில் கணேஷ், ராஜலட்சுமி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1607

    26

    12