ஆயுள் முழுவதும் செந்தில்பாலாஜிக்கு சிறை தான்.. ஒரே மேடையில் விவசாயம் பற்றி விவாதிக்க CM ஸ்டாலின் தயாரா? இபிஎஸ் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 9:41 pm

ஆயுள் முழுவதும் செந்தில்பாலாஜிக்கு சிறை தான்.. ஒரே மேடையில் விவசாயம் பற்றி விவாதிக்க CM ஸ்டாலின் தயாரா? இபிஎஸ் சவால்!

கரூர் தோரணம்பட்டியில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து இ.பி.எஸ் பேசியதாவது: ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.ஒரே மேடையில் விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா?

அதிமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை திமுக அரசு வழங்குகிறது. ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.

ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுக தான். தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே ஸ்டாலின் செயல்படுகிறார் திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர் இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சை பொய் கூறுகிறது என கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 214

    0

    0