எனக்கு First சிம்பு வேணும், அடம்பிடித்த ஸ்ரீநிதி-க்கு Depression.? வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.!

Author: Rajesh
30 May 2022, 12:41 pm

சமீபமாக அதிக சர்ச்சைகளில் நடிகை ஸ்ரீநிதியின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதற்கிடையே சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நக்‌ஷத்ரா. இதன் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார்.

சமீபத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவில், நக்‌ஷத்திராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகியதாகவும், அவர் நல்லவர் இல்லை என்றும், அவரது மொத்த குடும்பமும் நட்சத்திராவை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டார்.

இந்நிலையில் ஸ்ரீநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நக்‌ஷத்திரா, “2-3 நாளா நான் எதோ பிரச்னைல இருக்குறதாவும், நா லவ் பண்றவரோட குடும்பம் என்ன இறுக்கி பிடிச்சி வச்சிருப்பதாகவும் ஒரு விஷயம் பரவிட்டு இருக்கு. அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா எனக்கும், என் கூட இருக்கவங்களுக்கும் ஃபோன் பண்ணி, என்ன பத்தி விசாரிக்கிறீங்க. அதனால தான் இந்த வீடியோ. சத்தியமா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நிம்மதியா இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!