சமீபமாக அதிக சர்ச்சைகளில் நடிகை ஸ்ரீநிதியின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதற்கிடையே சீரியல் நடிகை நக்ஷத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நக்ஷத்ரா. இதன் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார்.
சமீபத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவில், நக்ஷத்திராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகியதாகவும், அவர் நல்லவர் இல்லை என்றும், அவரது மொத்த குடும்பமும் நட்சத்திராவை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டார்.
இந்நிலையில் ஸ்ரீநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நக்ஷத்திரா, “2-3 நாளா நான் எதோ பிரச்னைல இருக்குறதாவும், நா லவ் பண்றவரோட குடும்பம் என்ன இறுக்கி பிடிச்சி வச்சிருப்பதாகவும் ஒரு விஷயம் பரவிட்டு இருக்கு. அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா எனக்கும், என் கூட இருக்கவங்களுக்கும் ஃபோன் பண்ணி, என்ன பத்தி விசாரிக்கிறீங்க. அதனால தான் இந்த வீடியோ. சத்தியமா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நிம்மதியா இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.