விஜய் டிவி செட்டில் காதல்.. பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர்.. வைரலாகும் வீடியோ..!
Author: Rajesh11 August 2022, 12:43 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.
அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் – பாவனி ஜோடி. இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.