தனிமையில் எதையும் சமாளிக்கும் Maturity.. விவாகரத்து சர்ச்சை குறித்து பேசிய சீரியல் நடிகை ரக்ஷிதா..!

Author: Rajesh
9 May 2022, 10:11 am

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர்.

தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற புத்தம்புது சீரியலில் ரக்ஷிதா கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவரது கணவர் தினேஷுக்கு சீரியல்களில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதாலும், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இருவரும் தனித்தனியாக அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர் என்ற தகவலும் வெளிவந்தன. இந்நிலையில், நடிகை ரசித்தா கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்து வரும் இது சொல்ல மறந்த கதை சீரியல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக இருந்து வளர்க்கும் பெண்ணாக நடித்துள்ளார் நடிகை ரசித்தா.

இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாக இந்த பேட்டியில் பேசிய ரசித்தா, தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…