மருத்துவமனையில் சீரியல் நடிகை தற்கொலை முயற்சி.? சிம்புவுக்கு டார்ச்சர் கொடுத்த நடிகையால் பரபரப்பு.!
Author: Rajesh25 June 2022, 1:56 pm
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பேசும் விஷயங்கள் தொடர்ச்சியாக வருகின்றன. நட்சத்திரா திருமண வாழ்க்கையில் ஏமாற போகிறார் அவருக்கும் சித்ரா போன்ற நிலைமைதான் வரும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல் நடிகர் சிம்புவை காதலித்து வருவதாக அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் எங்களை சேர்த்து வையுங்கள் என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி புழல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், திடீரென ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார், மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.