மனைவியை வைத்து பாலியல் தொழில்.. கணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் : காவலர்களே உடந்தையானது அம்பலம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 2:22 pm

திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை வைத்து பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பவித்ரன் வீட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது மூன்று காவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பவித்ரனுடன் அவரது செல்போனை, பிடுங்கிக்கொண்டு, ஒரு லட்சம் பணம் கொடுத்தால் பவித்ரனை விட்டு விடுவதாக கூறி காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர் பவித்ரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு நல்லூர் போலீசார் பவித்ரனின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்து தேடி சென்றபோது பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மேற்கண்ட பவித்ரனையும், ஈரோட்டை சேர்ந்த தனபால் சிங் (47), முருகன்(42) என்பவர்களையும் அடைத்து வைத்திருந்தனர்.

மேலும் அவர்களை அடைத்து வைத்திருந்த போலீசார் சோமசுந்தரம் (33), கோபால்ராஜ் (33), லட்சுமணன்(32) ஆகியோரையும் மற்றும் உடனிருந்த ஜெயராமன் (20), அருண்குமார்(24), ஹரிஷ் (25) ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பபட்டனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டஆயுதப் படையில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் சோமசுந்தரம், கோபால் ராஜ் ஆகியோரையும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதேபோல நீலகிரி மாவட்டம், சோலார் மட்டம் காவல் நிலையத்தில் பணியாற்றிய லட்சுமணன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட செய்துள்ளார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்