தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 7:29 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு, தற்கொலைக்கு முயன்ற செல்வம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சேர்ந்த செல்வம் என்ற நபர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் செல்வம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அத்து மீறி சிறுமி வீட்டிற்குள் புகுந்த குற்றத்திற்கு 2 வருடம், சிறுமியை தாக்கியதால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட குற்றத்திற்காக 2 வருடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 10 வருடம் என 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 6000 அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

நீதிபதி தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கும் போதே செல்வம் மறைத்து வைத்திருந்த அரளி விதையை சாப்பிட்டார். உடனடியாக சுதாரித்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் மயங்க நிலையில் இருக்கும் செல்வத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீதிபதி முன்பு குற்றவாளி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலைக்கும் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 473

    0

    0