கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தாயார் வீட்டில் சில நாட்களும் மாமியார் வீட்டிலும் சில நாட்களும் மாறி மாறி இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தாழக்குடி பகுதியில் ஒரு சுடுகாட்டில் ஆடைகள் கலைந்த நிலையில் படுகாயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பெண்ணை கொன்றது கொழுந்தன் என்பது தெரியவந்தது. அவரை உடனே கைது செய்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்காக அண்ணியை இரும்பு கம்பியால் தாக்கியது மட்டுமல்லாமல் மயக்க நிலையில் இருந்த அவரை காரில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு உடலை தாழக்குடி ஊர் பகுதியில் ஒரு சுடுகாட்டில் உடலை போட்டுவிட்டு நகையை எடுத்து தப்பித்து சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், அண்ணியை கொலை குற்றத்திற்காக கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு அபராதமாக ரூ.3000 விதிக்கப்பட்டது.
சிஎஸ்கே-க்கு ஆதரவு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படக்குழு சென்னை சூப்பர்…
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…
தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
This website uses cookies.