இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 10:32 am

இளம்பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்த மயக்க மருந்து கொடுத்து காரியத்தை சாதித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். (68 வயது) பிசியோதெரபிஸ்ட் இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 23 வயதான இளம் பெண் அறிமுகமானார்.

அவர் கட்டிடக் கலை நிபுணர் ஆவார். அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்து பேசினர்.

அப்பொழுது ஆனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டி தர வேண்டும் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார்.

அதன் பேரில் அந்த இளம் பெண் அவருடைய வீட்டுக்குச் சென்றார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லை அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்.

அந்த இளம் பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். அதை குடித்ததும் இளம்பெண் மயங்கி விட்டார். இதை அடுத்து ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும் படிக்க: “மாதவிடாய் வலியோடு எப்படி வர்றது சார்” ; காம இச்சைக்காக மாணவியை அழைக்கும் ஆசிரியர்… அதிர்ச்சி ஆடியோ!!

மயக்கம் தெளிந்து எழுந்த இளம் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த இளம் பெண் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல் துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து அந்த இளம் பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க: காலையில் கைதான மோகன் ஜி மாலையில் விடுதலை : சட்டவிரோதம் என நீதிபதி காட்டம்!

இதை அடுத்து உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

உடனே தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 249

    0

    0