கவுன்சிலிங் என்ற பெயரில் 50 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய ‘டாக்டர்’!
Author: Hariharasudhan15 January 2025, 2:46 pm
நாக்பூரில், பல்வேறு பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் பெற வரும் பெண்களிடம் அத்துமீறி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் படிப்பு மற்றும் பணி ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்காக, பல்வேறு வகையான பயிற்சிகள் (கவுன்சிலிங்) அளிப்பதாக பெற்றோர்களிடம் வாக்குறுதி அளித்து, பல மாணவிகளை 45 வயதான உளவியல் மருத்துவர் அடங்கிய அந்த டாக்டர் குழுவினர் அழைத்துச் சென்று உள்ளனர்.
இதன்படி, நகரின் சந்திரபூர், பண்டாரா மற்றும் கோண்டியா உள்பட பல்வேறு பகுதிகளில் அவர்கள் முகாம் நடத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் மாணவர்களை விட, மாணவிகளை இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதற்காக அவருடன் ஒத்துழைக்கும் சில பெற்றோரை, டாக்டர் தங்களது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர்.
மேலும், பல இடங்களுக்கு மாணவிகளை உல்லாசப் பயணமாகவும் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்துள்ளார். முதலில் அவர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் அவர், பின்னர் அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
பின்னர், கடந்த 15 ஆண்டுகளாக இந்த கொடூரச் செயலை அந்த டாக்டர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரிடம் கவுன்சிலிங் பெற்ற 27 வயதான முன்னாள் மாணவி ஒருவர் தான் இந்த சம்பவத்தை தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் திடீரென நுழைந்த கும்பல்.. பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. சென்னையில் கொடூரம்!
இருப்பினும், அவரை மிரட்டி தொடர்ந்து தனது இச்சைகளுக்கு பணிய வைத்து வந்து இருக்கிறார். ஒத்துழைக்காவிட்டால், அவருடைய கணவரிடம் உண்மையைச் சொல்லி விடுவேன் என்றும் அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் பயின்று தற்போது மனைவியாக உள்ள பெண் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.