தேசிய மகளிர் ஆணையம் மூலம் வெளியான பாலியல் புகார்.. அரசு கலைக் கல்லூரியில் பகீர்… பேராசிரியரே உடந்தை!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 5:11 pm

கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் வெளியூர் மன்வைகள் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மையம் கிருஷ்ணவேணி தலைமையில் வால்பாறை கல்லூரிக்கு விழிப்புணர்வு சம்பந்தமாக வருகை தந்துள்ளனர்.

இதில் விழிப்புணர்வில் மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா படிக்கும் இடத்தில் தொந்தரவு உள்ளதா சமுதாயத்தில் தொந்தரவு உள்ளதா போன்ற கேள்விகளை மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 7 மாணவிகள் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் சிலர் எங்களை தொட்டு பேசுதல் ஆபாசமாக பேசுதல் அலைபேசிக்கு தவறான மெசேஜ் அனுப்புதல் போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் இவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது.எங்களால் படிக்க இயலவில்லை நாங்கள் வெளியூருக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள கிருஷ்ணவேணி தலைமையில் வால்பாறை காவல் நிலையத்துக்கு இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவரும் என்சிசி பயிற்சியாளர் ஒருவரும் உள்ளதாக தெரியவந்தது இதைத் தொடர்ந்து 4 பெயர்களையும் பாலியல் சீண்டல் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!