கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது நபர். இவரது மகள் கடந்த 2019 ம் ஆண்டு சில வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இது குறித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவை வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (எ) பப்ஸ் கார்த்திக் (29), ஆட்டோ மணி (33), பி.என் புதூர் பொன் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ராகுல், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் பிரகாஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: திமுக பெண் கவுன்சிலரின் 14 வயது மகள் கடத்தல்…? போலீசார் அலட்சியம்… மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க புகார்..!!
பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்கள் அடிக்கடி பெண்ணின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று செல்வபுரம் பகுதியில் பெண்ணின் தந்தை நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி உள்ளிட்டோர் பெண்ணின் தந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் கோர்ட்டில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொன்னால் ரூ. 15 லட்சம் தருகிறோம் என தெரிவித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணின் தந்தையை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் மியாரிட் மனோகரன் மற்றும் காவலர்கள் அவர்களைத் தேடிப் பிடித்து வழக்குப் பதிவு செய்து பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் பப்ஸ் கார்த்திக் மீது போக்சோ, பெண்கள் வன் கொடுமை உள்ளிட்ட 7 வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.