திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை : ஏமாற்றிய வங்கி மேலாளர் மீது கல்லூரி மாணவி புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2022, 7:47 pm
கரூர் : பொறியியல் கல்லூரி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் மீது மாணவி புகார் அளித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூரில் வசிப்பவர் சந்தியா. (வயது 21). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
தனது உறவினரின் வீட்டுக்கு விசேஷத்திற்கு வந்த ஆக்ஸிஷ் வங்கியின் கரூர் கிளை மேளாலராக பணியாற்றி வரும் திருச்சி மாவட்டம் துறையூரை சார்ந்த சண்முகநாதன் என்பவருடன் கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
11 மாத காதல் வாழ்க்கைக்குப் பிறகு தனியார் வங்கி மேலாளர் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும், தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் என்பதால் தன்னை ஒதுக்குவதாக கூறி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.