துப்புரவு பணிக்கு வந்த 70 வயது மூதாட்டிக்கு காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு.. தூத்துக்குடியில் அதிர்ச்சி.. தலைமை காவலர் சஸ்பெண்ட்..!!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 9:06 pm

தூத்துக்குடி ; காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த முத்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நாள்தோறும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்றும் காலை வழக்கம் போல பணிக்கு வந்த அவரிடம் தலைமை காவலர் செல்வகுமார் ரைட்டர் ரூமில் புகையிலை உள்ளது எடுத்துட்டு வா என கூறியுள்ளார்.

அதற்கு அந்த மூதாட்டி என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படி என்றால் காசு கொடு என கேட்டு செல்வக்குமார் அந்த மூதாட்டியிடம் தொந்தரவு செய்து, அந்த மூதாட்டி அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூக்குரலிட்டு இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தனது பணிகளை சரிவர செய்யாமல் இருந்த தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?