கணக்கு பார்க்க வேண்டும் என கூறி காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டல்.. BJP நிர்வாகி தலைமறைவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 4:20 pm

கணக்கு பார்க்க வேண்டும் என கூறி காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டல்.. BJP நிர்வாகி தலைமறைவு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வருகின்றார்.

இவர் காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரான பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரன் என்பவர் சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார் .

இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த கலைச்செல்வி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடிஸ்வரன் மீது மானபங்கம் செய்தல் ,வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி அருகே அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் , பாஜக மாவட்ட செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட தலைவர் பழனி என் கனகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…