பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது : வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான்…

Author: kavin kumar
18 February 2022, 1:18 pm

திருச்சி : திருச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரிடம் தேர்வு நடக்கும் போது அதே பள்ளியில் ஆங்கிலத்துறை ஆசிரியராக பணியாற்றிவரும் முருகேசன் என்ற ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சக ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை அறையில் பூட்டி வைத்தனர்.

இந்த சம்பவம் அறிந்த இனாம்குளத்தூர் காவல் நிலைய போலீசார் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் வந்து மாணவி மற்றும் மாணவி தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் (ஜீயபுரம்) மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் முருகேசனை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E